Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….‌ கோவை, சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில்கள் திடீர் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11:55 மணி அளவில் இயக்கப்படும் ரயில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு 9:30 மணி அளவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதனையடுத்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – கோவை இடையே மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை-எம்ஜிஆர் சென்ட்ரல் இடையே 6:15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவைகள் டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோன்று எம்ஜிஆர் சென்ட்ரல்- கோவை இடையே காலை 7:10 மணிக்கு இயக்கப்படும் ரயில், கோவை-எம்ஜிர் சென்ட்ரல் இடையே மதியம் 3:05 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இதற்கு தகுந்தார் போன்று பயணிகள் தங்களுடைய பயண நேரத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Categories

Tech |