கர்நாடக மாநிலம் விஜயபுராவிலிருந்து கேரள மாநிலம் கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை விஜயபுரா பகுதியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை பிற்பகல் 2:20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இதேபோன்று நவம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை கோட்டயம் பகுதியில் இருந்து விஜயபுராவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்த ரயில் மதியம் 3:30 மணியளவில் கோட்டயம் பகுதியில் இருந்து கிளம்பி வியாழக்கிழமை இரவு 8:30 மணி அளவில் விஜயபுராவை சென்றடையும். இந்த ரயில் அல்மட்டி, பாகல்கோட், ராணி பென்னுர், ஹரிஹர், பிரூர், நிந்தவூர், தும்கூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்கோடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் டவுன் போன்ற பகுதிகளில் நின்று செல்லும்.
அதன் பிறகு கோயம்புத்தூர் வழித்தடத்தில் ஆலப்புழா மற்றும் சென்னை விரைவு ரயில், போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூர் சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் நேரமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிற்பகல் 1:30 மணிக்கு பதிலாக 1:35 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூர் பகுதிக்கு இரவு 9:55 மணி அளவில் செல்லும். இதைத்தொடர்ந்து திருப்பூருக்கு 10:45 மணிக்கு, ஈரோட்டுக்கு 11:40 மணிக்கு செல்லும். மேலும் சென்னைக்கு மறுநாள் காலை 6:10 மணியளவில் செல்லும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது