டாஸ்மாக் மூலமாக மது விற்பனையை தமிழக அரசு முழுமையாக நடத்தி வருகிறது. மது விற்பனை மூலமாக வருடம் தோறும் ஆயதீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் விதமாக 1937 ஆம் வருடம் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் விதமாக மதுவிலக்கு திருத்த அவசர சட்டமானது நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் விரைவில் மதுபானங்கள் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. முதலில் வெளிநாட்டு மதுபானங்கள், பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என்று கூறப்படுகிறது.