Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

காலையே ஷாக் கொடுத்த கொரோனா…. துவண்டு போன தூங்கா நகர் …!!

மதுரை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதுவரை மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களிலும் அதன் பாதிப்பு  அதிகளவில் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதுவரை  பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்து பதிவாகியிருக்கிறது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |