ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு புதிய கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு பல்வேறு நாடுகளும் அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இது வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு புதிய கொரோனா நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஒவ்வொரு நிமிடத்திற்கு 140 தடுப்பூசிகள் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.