மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் கே.எஸ் பிரேம்குமார் என்ற கொச்சி பிரேமன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தில்லி வாலா ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நாடக கலைஞராக இருந்து பின் சினிமாவுக்குள் நுழைந்த கொச்சி பிரேமன் மூச்சு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. மேலும் நடிகர் கொச்சு பிரேமன் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.