ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீப காலமாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை கிருஷ்டி தற்போது திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 71. மேலும் நடிகை கிருஷ்டியின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.