Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிரபல தமிழ் காமெடி நடிகர் உடல்நல குறைவினால் திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் விசுவின் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விவேக், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

இந்நிலையில் சிவ நாராயணமூர்த்தி அவருடைய சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். இவருடைய வயது தற்போது 67. இவருடைய இறுதிச் சடங்கு பட்டுக்கோட்டையில் வைத்து இன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மேலும் சிவநாராயண மூர்த்தியின்  மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |