Categories
சென்னை மாநில செய்திகள்

Shock!!… சென்னையில் பொதுவெளியில் டிஜிட்டல் விளம்பர பலகை வைத்து விபச்சாரம்… போலீசுக்கு பறந்த புகார்…. பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் விபச்சார தொழிலுக்கு தடை செய்யப்பட்ட போதிலும் ஒரு சில மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவைகளில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி விபச்சார தொழில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பான சென்னை மாநகரில் பொதுவெளியில் அதுவும் டிஜிட்டல் பலகையில் விபச்சார தொழிலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதாவது சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் பலகையில் ரூபாய் 1000 கொடுத்து ஏதேனும் ஒரு பெண்ணுடன்  பாலியல் உறவு  வைத்துக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளவாசியான கவிதா கஜேந்திரன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இதுபோன்ற சம்பவம் எப்படி நடக்கிறது என்பதை  விசாரணை செய்ய வேண்டும் என்று போலீசார், கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்திய பெண்கள் நல ஆணையம் போன்றவற்றை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு போலீசாரும் மறு பதில் அளித்துள்ளனர். அதில் உங்களுடைய புகார் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |