நாட்டில் சமீபகாலமாக வங்கி மோசடி களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வங்கி மோசடிகள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் நிதியாண்டில் தனியார் வங்கிகள் அதிக அளவிலான வங்கி மோசடிகளை பதிவு செய்துள்ளன. அதாவது தனியார் வங்கிகளில் 5,334 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 3,078 வங்கி மோசடிகளும் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகின்றது.
அதனைப்போலவே வெளிநாட்டு வங்கிகளிலும் 494 மோசடிகளும், சிறு நிதி வங்கிகளில் 155 மோசடிகளும் நடைபெற்றுள்ளது. தனியார் வங்கிகளில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் கார்டு மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடிகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொகை அடிப்படையில் பார்த்தால் 1,38,211 கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் நடைபெற்று உள்ளது.