பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தி வெர்ஜின் ட்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்க, சன்னி சிங், பாலக் திவாரி போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
மவுனி ராய்க்கான சீனை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்துள்ளது. இந்த விபத்திலிருந்து மவுனி ராய் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். அதோடு வேறு யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட் 20 முதல் 30 சதவீதம் வரை எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.