கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் பொது முடக்க காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துள்ளது என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு அதிகப்படியான காலங்கள் ஆகும் என்று சொல்லி வந்தாலும் மீட்டெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டிருக்கிறது. இதனிடையே சிஎம்ஐஇ என்ற தனியார் நிறுவனம் வேலையில்லா திண்டாட்டம் குறித்து நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளதாக சிஎம்ஐஇ ஆய்வில்தெரியவந்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், பீகார் மாநிலம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவும் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.