20 வருடங்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா கேல்கரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1986ல் இருந்து 2016 வரை மைக்கேல் ஆண்ட்ரீசன் என்ற 57 வயது ஆசிரியர் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் போலீசிடம் வந்து கடந்த 2001-ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்தார்.
இதேபோல 1999 முதல் 2005 வரை படித்த மாணவிகளும் தங்களை மைக்கேல் தங்களிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டார் என மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட மைக்கேல் ஆண்ட்ரீசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.