Categories
உலக செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! கரடிகளை புகைப்படம் எடுக்க சென்ற நபர்… எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கனடாவில் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற புகைப்பட கலைஞருக்கு எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சால்மன் வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலகட்டம் என்பதால் grizzly bear எனும் கரடிகளையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக காண இயலும். இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக Babine ஏரிக்கரை வழியாக சென்றுள்ளார். அதாவது இந்த காலகட்டத்தில் சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதால் அந்த இடம் கரடிகளை காண்பதற்கு உகந்த இடமாக பெயர் பெற்றதாகும்.

அந்த வகையில் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற அந்த புகைப்பட கலைஞரை அங்கிருந்த கரடி ஒன்று எதிர்பாராதவிதமாக தாக்கியுள்ளது. அதில் அந்த புகைப்பட கலைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |