தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து வழக்கம்போல் கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளன. குறைவாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் விரைவாக முன்பதிவு செய்துகொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories