உலக அளவில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்பிறகு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 26-ம் தேதி ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி பார்க்க வந்த ஒரு வெளிநாட்டு பயணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த சுற்றுலா பயணி அர்ஜென்டினாவை சேர்ந்தவர். இவருக்கு தொற்று உறுதியான நிலையில், திடீரென தலைமறைவாகி விட்டார். மேலும் இவரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.