டெல்லி CAA போராட்டத்தில் துப்பாக்கிச் சுடு நடத்தியவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர் கிழக்கு டெல்லியின் தல்லுபுரா கிராமத்தை சேர்ந்தவர் என்றும் , அவரின் பெயர் கபில் குஜார் என்றும் தெரியவந்துள்ளது.இவர் துப்பாக்கியால் சூடும் போது ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டுள்ளார். அதே போல அவரை போலீஸ் மடக்கி பிடித்து இழுத்துச் செல்லும் போது இந்த நாட்டில் இந்துக்களே மேலானவர்கள் என்று கத்தியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.