Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு புது சிக்கல்…. ஷாக் கொடுத்த ICMR…. பதறவைக்கு தகவல்…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி. இந்த மாநில முதல்வர்களான மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேற்று கொடுத்த பேட்டி இந்தியாவையே அதிர்ச்சியடையவைத்தது. அதில் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து கொரோனா பரபரப்பை அதிகரித்தது. டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா வந்ததில் யாருக்கும்  கொரோனா அறிகுறியான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

அதே போல மும்பையில் கொரோனா தொற்று குறித்து செய்தி சேகரிக்கும் 35க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருக்கின்றதா ? இல்லையா ? என்று ஆய்வு மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் கொரோனாவின் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்திருக்கிறது என்று அந்த மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இதே தகவலை தான் தற்போது ஐ.சி.எம்.ஆர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 80 சதவீதமானவர்களுக்கு கொரோனா அறிகுறிகளே இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது இந்திய மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மட்டும் தான் அவருக்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.ஆனால் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் அல்ல மொத்த எண்ணிக்கை 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார். இது இந்தியாவுக்கு இக்கட்டான, சிக்கலான விஷயமாக மாறியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை தான் நாம் தனிமைப்படுத்தி, அவர்களை பரிசோதனை செய்து சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். ஆனால் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80 % பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐ.எம்.சி.ஆர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இன்னும் எத்தனை பேர் நாடு முழுவதும் கொரோனா அறிகுறி இல்லாமல், கொரோனவை தங்களது உடம்பில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறியோடு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகத்தான் பார்க்கப்படுகின்றது.

 

Categories

Tech |