Categories
தேசிய செய்திகள்

கோயிலுக்குள் நுழைந்த சிறுவன் சுட்டுக்கொலை… 4 வெறியர்கள் கைது..!!

கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன் ஒருவனை ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் (வயது 17) என்ற பட்டியலின சிறுவனை ஆதிக்கசாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று சிறுவன் விகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  லாலா சௌகான், கரோம் சௌகான், ஜாஸ்வீர் மற்றும் பூஷன் ஆகிய 4 உயர்சாதியினர், துப்பாக்கியால் சிறுவனை சுட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், “தூப்பாக்கி சுடும் சத்தம் கேட்டவுடன்  நாங்கள் எழுந்து சென்று பார்த்தபோது, விகாஷ் (மகன்) ரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவனை மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றபோது வழியிலேயே இறந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, டோம்கேரா கிராமத்தில் உள்ள கோயிலுக்கு என்னுடைய மகன் சென்றான். அதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே எனது மகன் கொலை செய்யப்பட்டான்” என்றார்.

Want Justice': Kin of UP Dalit Teen Shot Dead Over 'Temple Entry'

மேலும், கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அப்பவே புகாரளித்ததாகவும், காவல்துறையினர் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்..

இந்த கொலையை செய்த குற்றவாளிகள் 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |