Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சோகம்..!!

ஆந்திராவில் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்ற பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு சென்றது.. இந்தநிலையில் மாட்டின் வாய் பகுதி கொடூரமாக கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக திரும்பி வந்தது.. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அலுவலர் கூறுகையில், “மாடு மேய்ச்சலுக்காக  காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது.. அப்போது அந்த பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்தபோது, அது வெடித்துள்ளது. இதில் மாட்டின் வாய்ப் பகுதி கொடூரமாக கிழிந்துள்ளது.

இந்தநிலையில் பசு மாட்டுக்கு தற்போது மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் கொடூர செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை வலைவீசி தேடிவருகிறோம்” என்றார்.

கேரளாவில் மே மாதம் 27ஆம் தேதி பசியால் தவித்து கொண்டிருந்த சினை யானைக்கு பட்டாசுகளால் நிரப்பப்பட்ட தேங்காய் பழத்தை சமூக விரோதிகள் கொடுத்தனர்.. இதனைத் தின்ற அந்த யானை யாருக்கும் தொந்தரவளிக்காமல் அந்த பகுதியிலிருந்த நதியில் இறங்கி பரிதாபமாக உயிரை விட்டது நினைவுக் கூரத்தக்கது.

Categories

Tech |