தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலுக்கு சில பிரச்சினைகளின் காரணமாக சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகரும், தேமுதிக கட்சியின் பிரமுகருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நடிகர் வடிவேலு மீசை ராஜேந்திரனை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளார். இதனால் மீசை ராஜேந்திரனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருமாறு நடிகர் வடிவேலு அழைத்துள்ளார். ஆனால் மீசை ராஜேந்திரன் நடிக்க வேண்டிய இடத்தில் பெசன்ட் ரவி நடித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து வடிவேலுவிடம் மீசை ராஜேந்திரன் கேட்டபோது நீங்க விஜயகாந்த் ஆளு. உங்களுக்கெல்லாம் சான்ஸ் தர முடியாது என்று முகத்துக்கு நேராக சொல்லிவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த மீசை ராஜேந்திரன் இனிமேல் யாரிடமும் இப்படி சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாராம். இந்த தகவலை தற்போது மீசை ராஜேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை பிரேமா பிரியாவும் வடிவேலுவால் என்னுடைய சினிமா வாழ்க்கை வீணாகி வாய்ப்பின்றி தவிக்கிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.