டெல்லியில் இருந்து ரயிலில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் தன்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கியுள்ளார். ரயில்வே ஊழியர்கள் வழங்கிய அந்த ஆம்லெட்டில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அந்த பயணி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு டிசம்பர் 16-ஆம் தேதி நான் ரயிலில் பயணம் செய்த போது என்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கினேன்.
அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடக்கிறது. இந்த ஆம்லெட்டை சாப்பிட்டு என் மகளுக்கு ஏதாவது ஆகி இருந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று பதிவிட்டு பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சகம், பியூஸ் கோயல் உள்ளிட்டோரை ஹேஸ்டேக் செய்துள்ளார். இதற்கு தற்போது ஐஆர்சிடிசி விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பயணியின் பிஎன்ஆர் என் மற்றும் தொலைபேசி எண்ணையும் ஐஆர்சிடிசி கேட்டுள்ளது.
https://twitter.com/the_yogeshmore/status/1603969434187857920?s=20&t=HPGFahBCxsfyoZRnvNVsYg