Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

Shocking: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் அரசு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அதில் பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் சிலருக்கு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் கடலூரில் கள்ள சாராயம் குடித்து பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் 3 பேர் கொரோனா ஊரடங்கு போது கிரிக்கெட் விளையாடி விட்டு கரும்புத் தோட்டம் வழியாக வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே சாராய ஊறல் போடப் பட்டிருப்பதை பார்த்தே மூன்று பேரும் சாராயம் குடித்து மயங்கி விழுந்த உள்ளனர். அவர்கள் மயங்கி விழுந்ததைக் கண்ட சிலர் உடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |