இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெற்றோரின் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் எகிறி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெற்றோரின் விலை ஏறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13-க்கு விற்பனை செய்யப்படுவதால் அப்பகுதி வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். அதனைப் போலவே டீசல் ஒரு லிட்டர் 92.13 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.