Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவில் தினமும் இத்தனை சிறுவர்கள் தற்கொலையா?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்ற ஆண்டுகளில் மட்டும் 18 வயதிற்கு கீழ் கீழ் உள்ள சிறுவர்கள் 11,396 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு அறிவித்துள்ளது. சிறாரின் தற்கொலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்ற ஆண்டு மட்டுமே ஒரு நாளுக்கு 31 இளம் சிறார்கள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை கணக்கெடுக்கப்பட்டது. அதில்-2018ஆம் ஆண்டு 9,431 சிறுவர்கள் 2019-ஆம் ஆண்டு 9,613 சிறார்கள் மட்டும் 2020 ஆம் ஆண்டு, 11,396 சிறார்கள் என தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுபற்றி உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஷ்ரா நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாணவர்களின் தற்கொலை கூடிக்கொண்டே வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் என அனைத்து துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதில் கொரோனா காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், கடந்த 3 வருடமாக சிறார் தற்கொலை குறித்து, அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களுடைய மன நலனை காக்கும் விதமாக மனோதர்பன் திட்டம் உள்ளது. இந்த இணையதளம் இதற்கென்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக் குறிப்புகள் காணொளிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு 270 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி போன்ற அமைப்பின் மூலம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |