Categories
தேசிய செய்திகள்

SHOCKING: உஸ்… இப்பவே கண்ண கட்டுதே…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் சுமார் 15% வரை சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். சென்னையிலும் இது விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் மட்டும் உயர்ந்த பாடில்லை.

Categories

Tech |