Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

SHOCKING: ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை…. பெரும் பரபரப்பு….!!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் எனும் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுடிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |