ஜப்பான் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இந்நிலையில் அதில் இடம்பெற்றிருந்த உத்தரகாண்ட் ஹரித்வார் கிராமத்தை சேர்ந்த வீராங்கனை வந்தனா கத்தாரியாவின் வீட்டின் முன் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இருவர் பட்டாசு வெடித்து தோல்வியை கொண்டாடியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தையும் இழிவு செய்து,தலித்துகள் அணியில் இருப்பதால் தோற்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories