தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதையடுத்து இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரத்தின்போது கலைஞர் காமராஜரை புதைக்க மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பேசி வந்தார்.
இதையடுத்து, இது குறித்து காமராஜரின் பேத்தி மயூரி கூறுகையில், காமராஜர் மறைந்த போது மெரினாவில் அவரை புதைக்க மு.கருணாநிதி இடம் தரவில்லை என்று முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்கள். காமராஜரின் உடல் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட்டது. யாரும் புதைக்க இடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் இந்த விஷயம் பரப்பப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.