தந்தை ஒருவர் தனது மகள் காணவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பேஸ்புக் மூலமாக ஆண் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளார்.
எனவே சிறுமியை காணவில்லை என்று அவருடைய தந்தை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். பின் தன்னுடைய மகள் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் சிறுமி அடுத்த இடத்தை கண்டுபிடித்து காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.