சென்னையில் போலந்து நாட்டில் இருந்து சரக்கு விமானம் மூலம் வந்த பார்சலில் கண்ணாடி கூண்டுக்குள் உயிருடன் 107 விஷ சிலந்திகள் இருந்தன. இந்த சிலந்திகள் மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலந்திகளை தற்போது அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சிலந்திகளை கொண்டு வந்துவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விஷ சிலந்திகள் இந்தியாவிற்குள் வந்தால் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .மேலும் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.