தஞ்சை அருகே இளைஞர் ஒருவரை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது.
தஞ்சை அருகே பணத்தை திருடி விட்டதாக கூறி இளைஞர் ஒருவரை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் கொடூர வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அடிவாங்கும் இளைஞர் மயங்கி விழுந்த பின்னரும் விடாமல் மாட்டை அடிப்பது போல அடிக்கும் காட்சிகளை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.