தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது.அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளரும், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய கவிஞர் தேன்மொழி தாஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.கடும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கிண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.