ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், செல்வராகவன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். இவர் சர்க்கார், தர்பார், டிமான்டி காலனி ஆகிய படங்களில் கலை இயக்குனராக இருந்திருக்கிறார். மகான், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (23/10/2022) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார். சமகால மற்றும் மன்னர்கால வாழ்வியலை ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தில் தன் கலை இயக்கத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் கண்முன் கொண்டு வந்தவர் அவர்.