பாஜகவில் தனக்கு டம்மி பதவி வழங்கப்பட்ட விரக்தியில் மாவட்ட செயலாளர் பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி பாஜக பெண் நிர்வாகி பற்றி ஆபாச பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி பாஜக பெண் நிர்வாகி பற்றி ஆபாச பதிவு செய்த திருச்சி பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த காளீஸ்வரர் (45) பாஜக மாநகர மாவட்ட செயலாளர். இவரது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து போலி பேஸ்புக் ஐடி உருவாக்கி அதில் ஆபாசமான தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.அதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரன் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில்,காளீஸ்வரன் பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி தவறான தகவல்களை பதிவிட்டது திருச்சி கருமண்டபம் விசுவாஸ் நகரை சேர்ந்த திலகா சிவமூர்த்தி (50) என்பது தெரியவந்தது. இவர் பாஜக விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.பழிவாங்கும் நடவடிக்கையாக மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் ஃபேஸ்புக் கணக்கை ஹேக் செய்து கலைவாணி என்ற பெயரில் போன் நம்பரை குறிப்பிட்டு வீடியோ கால் ரூ.500, ஆடியோ கால் 200 ரூபாய் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.