நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பால் நிரப்புவதற்கு கவருக்கு ஆகும் செலவு, போக்குவரத்து செலவு, மின்னாற்றல் ஆகியவற்றின் செலவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளது.