Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு… புதிய வரி விதிப்பு… அதிர்ச்சி…!!!

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.

காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாய உட்கட்டுமான மேம்பாட்டுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாய் செஸ் வரி விதிக்கப்படும். மேலும் அண்ட் பிராண்டட் பெட்ரோலுக்கு அடிப்படை கலால் வரி லிட்டருக்கு ரூ.1.40, டீசருக்கு ரூ.1.80 அதிகரிக்கும். இதுதவிர சிறப்பு கூடுதல் கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |