சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசையில் பெண் ஒருவர் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். எப்படியாவது சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரிடம் சென்று சினிமாவில் சேர்ந்து நடிகையாக வேண்டும் என்று கூறியதில் இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நபர் சினிமா மோகத்தில் இருந்த அந்தப் பெண்ணை புகைப்படம் எடுப்பதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் இரவில் இயக்குனர்களை அறிமுகம் செய்கிறேன் என்று கூறி தன்னுடைய நண்பர்களை இயக்குனர்கள் போல நடிக்க செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.