Categories
தேசிய செய்திகள்

SHOCKING: ப்ளூடூத் இயர் போன்…. 15 வயது சிறுவன் திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள உதைப்பு என்ற கிராமத்தில் ராக்கேஷ் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். அவர் தனது நண்பர் ஒருவரிடம் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ப்ளூடூத் இயர்போன் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த ப்ளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியது. அதனால் மயங்கி விழுந்த சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிறுவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து பேசிய மருத்துவர், ப்ளூடூத் சாதனம் வெடித்து சிதறிய சம்பவத்தில் சிறுவன் ராகேஷ் கீழே விழுந்துள்ளார். அவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.எனக்கு தெரிந்த வகையில் நாட்டிலேயே இதுபோன்ற சம்பவத்தில் முதல்முறையாக இப்போதுதான் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |