நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் SARs- cov2 வைரஸ் கணிக்க முடியாததாக இருக்கிறது. இது லேசான முதல் மிதமான நோய்த்தொற்று என மக்களுக்கு கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வைரஸ் யாரையும் விடாது. மரணங்களுக்கு கூட வழி வகுக்கும். வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் இரு வயதினரையும் பாதிக்கக் கூடும் என்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி மட்டுமே வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.