தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் ஏற்படும் சில விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. பெரும்பாலும் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே.
இந்நிலையில் மதுரையில் சார்ஜர் போட்டு செல்போன் பேசும்போது போன் வெடித்து பிளஸ் 2 மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரூர் அருகே தினேஷ் என்பவர் மழையின்போது சார்ஜ் போட்டபடியே செல்போன் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராமல் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் சார்ஜ் போட்டுவிட்டு செல்போன் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.