நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மது பிரியர்கள், சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில் மது அருந்துவதால் கடந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. புகையிலை, பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மது அருந்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.