Categories
மாநில செய்திகள்

SHOCKING: மனதை உலுக்கும் கொடூரம் – பரபரப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம்  ப குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தையானது குறைப்பிரசவத்தில் பிறந்ததன் காரணமாக குழந்தையின் வயிற்றில் ஏதோ பிரச்சனை இருந்துள்ளது. இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் டியூப் வழியாக குளுக்கோஸ் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து செவிலியர் ஒருவர் குளுக்கோஸ் வழங்கப்பட்ட ஊசியை கையால் அகற்றாமல் கத்தரிக்கோலை வைத்து வெட்டியதால் குழந்தையின் கை விரல் துண்டாகியுள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான பதில் அளிக்காததால், குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் கை விரல் துண்டிக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |