மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் தன் தாய் நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு டாக்டர் படிக்க விருப்பமில்லை. ஆனால் தாய் தன்னை கட்டாயப்படுத்தி கத்தியை எடுத்து வந்து படிக்க சொல்லி மிரட்டினார். அவரை தள்ளி விட்டபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அதன் பிறகு பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories