Categories
தேசிய செய்திகள்

Shocking: மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை… நீதிபதிகள் கண்டனம்..!!

மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒருபுறம் இருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்காமல் தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது அரசு தொழில்களைப் பற்றி கவலைப் படுகிறது. அரசுக்கு மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை இது காட்டுகிறது என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளனர்.

Categories

Tech |