Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: மிகப் பிரபல தமிழ் சீரியல் நடிகர் கவலைக்கிடம்… சோகம்…!!!

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி, அலைகள் போன்ற தமிழ் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா தாக்குதலுக்கு பிறகு இவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. அதன்பின் மூளையில் கட்டி கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியபின் கோமாவுக்கு சென்றுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |