நடிகரும் இயக்குனருமான மகேஷ் காத்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தெலுங்கு சினிமா திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் சமீபத்தில் காரில் ஐதராபாத் செல்லும்போது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் கடந்த 2 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பெசராட்டு என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வருவதோடு திரைக்கதை எழுத்தாளராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.