தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.73.50 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டர் விலை ஏற்றம் மக்களை கதிகலங்க வைத்துள்ளது. கடந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1687.50 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.73.50 உயர்ந்து சிலிண்டர் ரூ.1, 761- க்கு விற்பனை செய்யப்படுகிறது.