நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என்பதை மக்கள் வானிலை கணிப்பை போல சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது மீண்டும் வடகிழக்கு மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. மூன்றாம் அலை எச்சரிக்கையை மீண்டும் தீவிரமாக எடுத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் முழு ஊரடங்கு போடும் நிலைக்கு கூட செல்லும் என அரசு எச்சரித்துள்ளது.