Categories
தேசிய செய்திகள்

SHOCKING: முதல் 10 விதிமீறல்களுக்கு ரூ.1000 அபராதம் – தொலைத்தொடர்பு அறிவிப்பு…!!!

டெலிமார்க்கெட் மற்றும் சில உண்மையான நிறுவனங்கள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் விதிமீறல் தொந்தரவில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக இவ்வாறு தொல்லைதரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தொலைதொடர்பு முடிவெடுத்துள்ளது.  அதன்படி முதல் 10 விதிமீறல்களுக்கு 1000 ரூபாயும், 10 முதல் 50 வரை தொந்தரவு செய்தால்  5,000 ரூபாயும், அதற்கு மேற்பட்ட விதிமீறல் தொந்தரவுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க DND என்று பதிவிட்டு தொல்லை தரும் நிறுவனத்தின் பெயரை டைப் செய்து STOP என்று குறிப்பிட்டு 1909 என்ற எண்ணுக்கு மெஸேஜ் அனுப்பினால் போதும் என்று தொலைத்தொடர்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |